மற்றும் கூட வந்த காவலாளிகள் ஓடி சென்று மன்னனிடம் பட்டத்து யானை கொலையுண்ட செய்தியை கூறினர் . புகழ் சோழ ன்னன் செய்தியை கேட்டு அதிர்ந்து போனான் . பகைவர் படையுடன் வந்து விட்டனரோ என அச்சமுற்று படையுடன் செல்ல தயாரானான் . தானும் வாள் மற்ற ஆயுதங்கள் ஏந்தி படைகள் பின்னே வர குதிரை ஏறி புறப்பட்டார் . அவர் ராஜவீதியை அடைந்தார் . அங்கு பட்டத்து யானை மலைபோல் வீழ்ந்து கிடந்ததை கண்டு மலைத்து நின்றார் . அங்கு மழுவுடன் எறிபத்தரை கண்டு இப்பெரும் சிவனடியார் அங்கு என்ன செய்கிறார் என்று அதிசயித்து நின்றார் . அரசனின் பின் நின்ற காவலாளிகள் யானையை கொன்றவர் அவரே என்று சிவனடியாரை காண்பித்தனர் . அரசன் அதிர்ந்து போனார் . அன்பே உருவான சிவனடியார் இக்காரியம் செய்தாரென்றால் தகுந்த காரணம் இருக்க வேண்டும் என்று உறுதியாக நம்பினார் .
No comments:
Post a Comment