மறுநாள் நவமி உத்சவம் . ஊரே திரண்டு உத்சவத்தை சிறப்பாக கொண்டாட ஆயத்தம் செய்த வண்ணம் இருந்தது . சிவகாமியாண்டார் அதிகாலையே எழுந்து நீராடி உடலெல்லாம் விபூதி பூசி ஈசன் பஞ்சாக்ஷரத்தை ஓதியவாறு மலர்களை கொய்து மாலையாக கட்டி அம்மாலைகளை ஒரு கூடையில் வைத்து தோளில் மாட்டிக்கொண்டு இறைவனுக்கு சாற்ற கோவிலை நோக்கி புறப்பட்டார் . மறுநாள் உத்சவத்தில் பங்கேற்க மன்னனின் பட்டத்து யானையை காவலர்கள் ஆற்றில் குளிப்பாட்டி அழைத்து வந்து கொண்டிருந்தனர் . யானை மதத்தில் இருந்தது . இதை உணராத காவலர்கள் அதை வீதி வழியே ஒட்டினர் . சிவகாமியாண்டார் தோளில் மலர்க்கூடையுடன் சிவநாமத்தை ஜபித்தவாறு சென்று கொண்டிருந்த தெருவில் நுழைந்த யானை அவரை ஒரு தள்ளு தள்ளி விட்டு பூக்கூடையையும் தூக்கி எறிந்து நாசம் செய்து விட்டு போய்விட்டது . யானை பாகனும் அதை கண்டு கொள்ள வில்லை .
No comments:
Post a Comment