முதியவரான சிவகாமியாண்டார் கோபத்துடன் யானையின் பின் ஓட யத்தனித்தார் . வயதின் காரணமாக கால் தடுக்கி கீழே விழுந்தார் . ஆண்டவனே இது நீதியா ? இப்படி செய்த யானையை தட்டி ஒட்டிக்கொண்டு போய்விட்டானே அந்த பாகன் . இன்று என்னால் இப்பூமாலைகளை உனக்கு சூட்டி அழகு செய்ய முடியாதே என்று பலவாறாக புலம்பினார் . அப்போது அங்கு மழுவுடன் வந்த எறிபத்தனார் இவர் புலம்பலை கேட்க நேர்ந்தது . ஓடி வந்து விழுந்து கிடந்த சிவகாமியாண்டாரை அணுகி விசாரித்தார் . ஒரு சிவனடியாருக்கு இவ்வநீதி நடந்ததை கண்டு வெகுண்டு எழுந்தார் . அந்த யானை எந்த பக்கம் சென்றது என்று கேட்டறிந்து அவர் அந்த பக்கம் சென்று தம் மழுவால் யானையையும் பாகனையும் வீழ்த்தி கொன்றார் . கூட இருந்த காவலர்களையும் வீழ்த்தினார் .
No comments:
Post a Comment