பூசலார் தன் மனத்தில் பெருமையுடன் அமைத்த அக்கோயிலுக்கு கும்பாபிஷேகத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த முகூர்த்தம் மன்னன் தேர்ந்தெடுத்த முகூர்த்தநாளும் ஒன்றாக இருந்தது ஈசன் விளையாட்டே .தன் பக்தனின் பெருமை உலகறிய வேண்டாமா ? காஞ்சி மாநகரம் குமபாபிஷேகத்திற்கு மிக குதூகலத்துடன் தயாராகி கொண்டிருந்தது . மக்கள் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் தயார் செய்து கொண்டிருந்தனர் . ஈசன் விளையாட்டை துவங்கினார் . இரவில் உறங்கிக்கொண்டிருந்த மன்னன் கனவில் மான் மழுவுடன் ஆடவல்லான் காட்சி தந்து ''மன்னா திருநின்றவூரில் நாளை எனது பரம பக்தன் பூசலார் அமைத்த ஆலயத்தில் நாம் நுழைவதாக முடிவு செய்திருப்பதால் நீ அமைத்த ஆலயத்தின் கும்பாபிஷேகத்தை ஒரு நாள் தள்ளி வைத்துக்கொள் '' என்று ஆணை இட்டு மறைந்தார் . மன்னன் திடுக்கிட்டு எழுந்தான் .
No comments:
Post a Comment