பூசலார் ஆலயம் கட்டும் தம் எண்ணத்தில் உறுதியாக இருந்தார் . எங்கெல்லாமோ அலைந்து நிதி திரட்ட முனைந்தார் . ஆனால் அவர் முயற்சி பயனளிப்பதாக தோன்றவில்லை . நாள் செல்ல செல்ல அவரை எல்லோரும் பைத்தியமாக எண்ணி ஒதுக்க ஆரம்பித்தனர் . வருடங்கள் கடந்தன . அவர் எண்ணத்தில் கொழுந்து விட்டு எறியும் ஆவல் தணிவதாக இல்லை . அவர் கனவு நிறைவேறுவதாக இல்லை . அது சாத்தியம் என்ற நம்பிக்கையும் குறைந்தது . ஆனாலும் அவருடைய அந்த கனவு அப்படியே நீ ரு ஊற்றி நெருப்பு அணைவது போல் போவதை அவர் விரும்பவில்லை . பொருள் சேர்த்து பெரும் ஆலயம் அமைத்து புற கண்ணால் காண்பது சாத்தியமாகாது என்ற எண்ணம் மனதை உலுக்கியது . ஆனாலும் அவர் தளரவில்லை . தன் உள்ளத்தில் பெரும் ஆலயம் அமைத்து தம் மனதார ஐயனை அக கண்ணால் மனம் குளிர சேவித்து மகிழ முடிவு செய்தார் .
No comments:
Post a Comment