அவர் நல்லாட்சியில் மக்கள் மகிழ்ந்து அவரை போற்றி கொண்டாடினர் . அவர் முடிசூடா மன்னராக திகழ்ந்தார் . அவருக்கு தில்லை கூத்தனை சேவிக்க பேரவா எழுந்தது . உடனே அவர் கிளம்பி தில்லை சென்றார் . அவருக்கு அங்கு சென்று ஆடவல்லானை சேவித்து கொண்ட பிறகு பொன்னம்பலத்திலுள்ள முடியை தன் தலையில் சூடிக்கொள்ள வேண்டுமென்ற ஆவல் எழுந்தது . தில்லை மூவாயிரத்தவர்களிடம் அவர்களிடம் தம் ஆவலை தெரிவித்தார் . அவர்கள் திட்டமாக மறுத்து சோழ மன்னர் ஒருவருக்கே அந்த உரிமை என்று கூறினர் . கூ ற்றனார் மனமுடைந்து போனார் . ஈசனை வருத்தத்துடன் வணங்கி தம் குறையை முறையிட்டார் . தில்லைவாழ் அந்தணர்கள் தாம் மறுத்ததால் என்ன நேருமோ என்று பயந்து தலை மறைவாகி விட்டனர் . கூற்றனார் எம்பெருமானிடம் சரணடைந்தார் . ஈசன் மனமிரங்கி அன்றிரவு அவர் கனவில் தோன்றி அவர் தலையில் தன் திருவடிகளை பதித்து சென்றார் . அடியாருக்கு தேகம் புல்லரித்து . சந்தோஷம் தாளவில்லை . அவர் பக்தி மேலும் பெருகிற்று . அவ்வாறே சிலகாலம் வாழ்ந்து சிவபதம் அடைந்தார் .
No comments:
Post a Comment