திண்ணன் பெரியவர்களை வணங்கிவிட்டு தன்னை தயார் செய்து கொண்டு வேட்டைக்கு புறப்பட்டான் . அவனுடன் சிறந்த வில்லாளிகளான நாணன் காடன் இருவரும் உடன் செல்ல தயாரானார்கள் . தாரை தப்பட்டைகள் முழங்க வேட்டைக்கு புறப்பட்டனர். தாரை தப்பட்டை சப்தத்தை கேட்ட மிருகங்கள் வெளியே ஓடிவர தொடங்கின . இவர்களும் விருப்பப்படி மிருகங்களை வேட்டை ஆடினார் . திடீரென ஒரு பெரிய காட்டு பன்றி குறுக்கே ஓடி வந்தது . திண்ணன் அதை கண்டதும் அதை துரத்தி வேட்டை ஆட முற்பட்டான் .அதுவும் வெகு தூரம் ஓடி அலைக்கழித்தது .
No comments:
Post a Comment