இப்போது நாம் பதினோராம் திருமுறையை காண்போம் .இதில் ஒரு அற்புதம் என்ன என்றால் இதன் முதல் முதல் பாடல் ஈசனே எழுதியது . அது ஒரு கடித வடிவில் உள்ளது . அன்பே வடிவான ஈசன் திரு ஆலவாய் உடையார் என்ற நாமத்துடன் தன் பக்தன் அரசன் சேரமான் பெருமானார்க்கு எழுதிய ஓலை . கடிதம் எழுதும் பாங்கோடு அவர் எழுதும் தம்மை முதலில் அறிமுகம் செய்து கொண்டு பின்பு யாருக்கு அனுப்பப்படுகிறதோ அவரை அறிமுகம் செய்துவி ட்டு பின்பு விஷயத்தை தெரிவிக்கிறார் . அதாவது அவருடைய பரம பக்தனான பாணபத்தருக்கு பொருள் உதவி செய்ய அரசன் சேரமானை வேண்டுகிறார் . அதுவே கடிதத்தின் சாரம் .+
No comments:
Post a Comment