புனிதவதியும் பரமதத்தனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தனர் . ஒரு நாள் பரம தத்தன் இரு மாங்கனிகளை புனிதவதியிடம் கொடுத்து தான் வந்து உண்பதாக சொல்லி சென்றான் . அவளும் அவைகளை பெற்றுக்கொண்டு உள்ளே வைத்தாள் . அப்போது ஒரு சிவனடியார் வந்து வாசலில் நின்று பசிக்கு உணவளிக்க கூறினார் . புனிதவதி தன் கணவர் கொடுத்தா கனிகளில் ஒன்றை சிவனடியார்க்கு மிக்க மகிழ்க்ச்சியுடன் ஈந்தாள் . சிறிது நேரத்தில் அவள் கணவன் வந்து அக்கனியை கொண்டு வருமாறு கூறினான் . அவளும் இருந்த ஒரு கனியை கொண்டவந்து கொடுத்தாள் . அதை உண்ட கணவன் அதன் ருசியில் மயங்கி மற்ற ஒன்றையும் கொண்டு வருமாறு கூறுகிறான் . திடுக்கிட்ட புனிதவதி ஈசனிடம் மன்றாடுகிறாள் . ஈசன் மற்றொரு கனி தந்து மறைகிறார் . மகிழ்ச்சியுடன் அதை கணவனுக்கு தருகிறாள் .
No comments:
Post a Comment