11 திருமுறையில் அடுத்த பாடல்களை பாடியவர் காரைக்கால் அம்மையார் . காரைக்கால் கிழக்கு தமிழகத்தில் கடற்கரையில் உள்ள வாணிப துறைமுகம் .அத்துறைமுகம் வெளிநாடுகளுடனும் வியாபாரம் நடைபெற்று வந்த வளம் மிகுந்த இடம் . அங்கு தனதத்தர் என்பவர் மிக செல்வாக்கு உடைய வணிகர் அவர் தவம் இருந்து பெற்ற ஒரே மகள் புனிதவதி . அக்குழந்தை சிறு வயது முதல் அந்த ஆடவல்லான் இடத்தில் மிக பக்தி கொண்டவளாக இருந்தாள் .அவர் ஆடலில் மிககவரப்பட்டவளாக இருந்தாள் . அவரை பற்றி பேசுவதே அவளுக்கு மிக ஆனந்தம் அளித்தது
. அவளும் வளர்ந்து அழகு பண்பு , பக்தி எதிலும் சிறந்து திகழ்ந்தாள் . அவள் பெற்றோர் அவளை நாகபட்டினத்தை சேர்ந்த பரமதத்தன் என்னும் வணிக வாலிபனுக்கு மணமுடித்து வைத்தனர் .
. அவளும் வளர்ந்து அழகு பண்பு , பக்தி எதிலும் சிறந்து திகழ்ந்தாள் . அவள் பெற்றோர் அவளை நாகபட்டினத்தை சேர்ந்த பரமதத்தன் என்னும் வணிக வாலிபனுக்கு மணமுடித்து வைத்தனர் .
No comments:
Post a Comment