ஆடவல்லான் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் ,திருக்கோவையார் சேர்ந்த 1000 பாடல்களை ஏடுகளில் பிரதி எடுத்து அதில் மாணிக்கவாசகர் பாட சிற்றம்பலத்தான் கைப்பட எழுதியது என்று கையொப்பமிட்டு தில்லை அம்பலவாணன் சன்னதி வாயிற்படியில் வைத்து மறைகிறார் . மறுநாள் காலை சன்னதி திறந்த கோயில் தீட்சிதர்கள் அந்த ஓலை சுவடிகளை கண்டு பெரும் அதிசயம் அடைந்து அதை எடுத்துக்கொண்டு மாணிக்கவாசகரை தேடி வருகின்றனர் .இத்தனை காலம் இத்தகைய மகான் கோயில் அருகிலேயே இருந்தும் கவனிக்க தவறியதை எண்ணி மனம் வருந்தி மாணிக்கவாசகரிடம் இந்த ஓலையை காண்பித்து அவரை வணங்குகின்றனர் . முதியவராக வந்து தன் பாடல்களை எழுதிக்கொண்டவர் தில்லை கூத்தன் என்று உணர்ந்த மணிவாசகர் ஈசனின் கருணையை நினைந்து நெக்குருகி கண்ணீர் மல்க ஸ்தம்பித்து நின்றார் .
No comments:
Post a Comment