மாணிக்கவாசகர் ஓடி சென்று ஈசனிடம் தன நன்றியை தெரிவிக்கிறார் . தில்லை தீக்ஷிதர்கள் அவரிடம் வந்து அவர் பாடல்களின் பொருளை விளக்குமாறு வேண்டுகின்றனர் . மணிவாசகர் தில்லை கூத்தன் சன்னதியில் பாடல்களின் பொருளை விளக்குவதாக கூருகிறார் . இச்செய்தி பாண்டிய அரசர் மற்றும் சான்றோர்களுக்கும் அறிவிக்க படுகிறது . எல்லோரும் ஆவலுடன் அம்பலவாணன் சன்னதியில் கூடுகின்றனர் .மாணிக்கவாசகர் எல்லா பாடல்களுக்கும் பொருள் ஒன்றே . அது அதோ அந்த அம்பலவாணன் மட்டுமே என்று நாத்தழுதழுக்க இருகைகளும் கூப்பி அவரை நெருங்கி ஜோதியில் கலக்கின்றார் . அனறு ஆனி மகம் .
No comments:
Post a Comment