இலங்கையை சேர்ந்த புத்த பிக்ஷுக்கள் சிலர் சிதம்பரத்தில் இருந்தனர் . அவர்கள் சிவபெருமானின் பெருமையை உணராதவர்கள் . அவரை பலவாறு இகழ்ந்து பேசிவந்தனர் . ஐயனின் ஆணைப்படி அவர்களுக்கு அறிவு புகட்ட மாணிக்கவாசகர் ஓர் ஊமை பெண்ணை பேச வைக்கிறார் அவளுடன் சேர்ந்து பிக்ஷுக்களுடன் வாதிட்டு அவர்களை வென்று அவர்களை பேச முடியாத ஊமை ஆக்குகிறார் . அவர்களும் தங்கள் தவறை உணர்ந்து மாணிக்கவாசகர் அருளால் மீண்டும் பேசும் திறனை அடைந்து அம்பலகூத்தனை சரணடைகின்றனர் .
திருவாசகம் பாடல்கள் எவ்வாறு நெஞ்சை உருக்கும் என்பதை உணர்த்தும் சம்பவம் காணலாம் . கி.உ. போப் எனும் ஆங்கிலேயர் தமிழ் ஆராய்ச்சி செய்ய தமிழகம் வந்தவர் . அவர் திருவாசகத்தை படித்து அதில் நெஞ்சை பறிகொடுத்தவர் .அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கிறார் ஒரு கடிதத்தில் திருவாசகத்தை எழுதுகையில் உணர்ச்சி வசப்பட அவர் கண்கள் கண்ணீர் சிந்துகின்றன . அவரும் அதை மறைக்க நினைக்காமல் அப்படியே அதை அனுப்பி விடுகிறார் .

No comments:
Post a Comment