ஈசன் சம்பந்தரை ( பாலை) கொடுத்து ஆட்கொள்கிறார்.நாவுக்கரசரை ( சூலை) கொடுத்து ம் , சுந்தரரை (ஓலை ) கொடுத்தும் ஆட்கொள்கிறார் .நாவுக்கரசர் பல்லவ மன்னனுடன் சேர்ந்து ஈசனை மறந்து பகுத்தறிவு பாதையில் செல்கிறார் . ஈசன் அவன் சகோதரியின் வேண்டுகோளுக்கு இறங்கி நாவுக்கரசருக்கு சூலை நோயை கொடுக்கிறார் . அவரும் தவறை உணார்ந்து வீரட்டானத்துறை ஈசனை சரண் அடைந்து ' கூற்றாயினவாரு ' என்னும் பதிகம் பாடி நலம் பெருகிறார் . அதன் பிறகு அவர் ஈசர்க்கு தொண்டராக பெரும் பணி ஆற்றினார் . சுந்தரர் திருமணத்தன்று ஈசன் ஓர் ஓலையை காட்டி பல தலைமுறைகளாக சுந்தரர் குடும்பம் தன் குடும்பத்திற்கு அடிமை என்று அவரை திருவெண்ணெய் நல்லூர் அழைத்து சென்று " பித்தா " என்று அடி எடுத்து கொடுத்து பாட செய்கிறார் . இவ்வாறு இந்த தமிழ் இசைக்காக அவர் ஆற்றிய விளையாடல்கள் அநேகம்(நாளூம் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர்முன் தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளன்) இவ்வாறு சுந்தரர் ஈசனை வர்ணிக்கிறார் .
Saturday, 30 March 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment