இவ்வாறு இசையால் பக்தி வளர்த்த மகான்களை நோக்கினால் ஒரு பெரிய உண்மை தெரிய வரும் .இவர்களில் 63 நாயன்மார்களும் 12 ஆழ்வார்களும் பெரும் பெருமை பெற்றவர்கள் . பரம் பொருளை நேரில் தரிசித்து பெரும் அ ருளை பெற்றவர்கள் . பெருமாளின் அவதாரமாக கருத பெற்றார் நம்மாழ்வார் . பெருமானின் அருட்கட்டளையால் ஒரு அ ந்தணரால் கருவறைக்கு சுமந்து எடுத்து செல்லப்பட்டார் திருப்பணாழ்வார் . ஈசனுக்கு கண் ஈந்த கண்ணப்ப நாயனார் , திருனாளைபொவார் , இவருக்காக நந்தி விலகி ஈசன் காட்சி அளித்தார் . இன்னும் பல பக்தர்கள் பிராம்மண வகுப்பை சேர்ந்தவர்கள் அல்ல .எல்லா வகுப்பை சேர்ந்தவர்களும் உள்ளனர் .பெருமாளோ ஈசனோ இதற்கு அப்பாற்பட்டவன் .அவர்கள் உள்ளத்தில் ஆழமாக குடிகொண்டிருக்கிறான் . எந்த வேற்றுமை யும் இல்லை . எல்லோரும் சமம் .நாம் ஏன் அவ்வாறு இருக்க தவறுகிறோம்
No comments:
Post a Comment