பக்தி பெருக்கால் இந்த மகான்கள் பாடிய தமிழிசைக்கு மயங்கிய பரம்பொருள் ஆற்றிய திருவிளையாடல்கள் அதிசயமானவை . பெரியாழ்வார் கண்ணனை மானசீகமாய் கண்டு , தாலாட்டு முதல் ஒவ்வொரு பருவ சேட்டைகளையும் மெய்யுருக வர்ணித்து பாடுகிறார் . பூமிதேவியே வளர்ப்பு மகளாக பெற்று அரங் கனையே மருமகனாக பெருகிறார் . ஆண்டாள் சிறு பிராயம் முதல் கண்ணனையே நினைந்து உருகி பாடி , பின்பு பாவை நோன்பு இருந்து அவரையே கணவனாக அடையும் பேறு பெறுகிறாள் . திர்ப்பாணாழ்வார் தாழ்ந்த குலத்தை சேர்ந்தவர் என்பதால் அரங்கன் கோவில் அந்தணர்கள் அவரை கடுமையாக நடத்த , அரங்கன் அந்தணர்கள் கனவில் தோன்றி ஆழ்வாரை தோளில் சுமந்துகொண்டு சன்னதிக்கு அழைத்து வருமாறு கட்டளை பிறப்பிக்கிறார் . பேயாழ்வார் ,பூதத்தாழ்வார் பொய்கை ஆழ்வார் மூவரும் , ஒரு மழைநாளில் ஒரு திண்ணையில் ஒண்டி நிற்க அவர்கள் இடையில் நாரணன் புகுந்து கொண்டு பிறகு அவர்களுக்கு காட்சிதருகிறான் . இன்னும் எத்தனையோ திருவிளையாடல்கள் .இசைக்கு இத்தனை மகத்துவம் .
No comments:
Post a Comment