திண்ணனுக்கு ஐயன் மீது அன்பு அளவு கடந்து பெருக்கெடுத்து ஓடியது .அந்தணர் செய்த்து ஈசனுக்கு பிடித்தமானதாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து தானும் அவ்வாறு செய்ய முடிவு செய்தான் . அப்போது அவனுக்கு ஐயன் பசியோடு இருப்பான் என்ற நினைவு வாட்டி எடுத்தது . உடனே காடன் தனக்காக சமைத்து வைத்திருக்கும் பன்றி மாமிசம் நினைவுக்கு வந்தது .. உடனே ஒரே ஓட்டமாக காடன் இருக்குமிடம் வந்தான் . நாணன் அதற்குள் திண்ணன் நிலையை சொல்கிறான் . திண்ணன் வேகவைத்த மாமிச துண்டங்களை ருசித்து எலும்பை நீக்கி துண்டங்களை ஒரு இலையில் பத்திரப்படுத்துகிறான் . மற்ற இருவரும் ஆச்சர்யமாக பார்க்கிறார்கள் ..
No comments:
Post a Comment