மலையை நெருங்க நெருங்க திண்ணனின் உள்ளத்தில் இன்ப உணர்வு அதிகரித்து கொண்டே போனது . மலை உச்சியை அடைந்து அங்கு ஒரு மரத்தடியில் லிங்க வடிவில் குடடுமித்தேவரை கண்டு அவன் உடல் சிலிர்த்தது . கட்டி அனைத்து கண்ணீர் சொரிந்தான் . சுற்றிலும் காடாக இருப்பதை கண்டு உள்ளம் பதறினான் . இங்கேயா தனியாக எப்படி இருக்கிறாய் ? என மனம் மிக நொந்து வினவினான் . லிங்கத்தின் சிரசில் பூவும் வில்வமும் இருக்க கண்டு நாணனை அதை பற்றி வினவினான் . நாணன் முன்பு திண்ணனின் தந்தையுடன் தான் வந்த போது ஒரு பெரியவர் லிங்கத்தை நீரால் அபிஷேகம் செய்து மலர்களை வைத்ததாக கூறினான் . திண்ணன் ஒரு வேளை அதுதான் சரியான முறையாக இருக்க வேண்டும் என்று எண்ணி தானும் அவ்வாறே செய்ய எண்ணினான்
No comments:
Post a Comment