ஆனந்தம் அடைந்த புனிதவதியின் பெற்றோர் அவளை அலங்கரித்து பல்லக்கில் உட்கார வைத்து சீர்வரிசைகளுடன் பரமதத்தன் வாழும் இடத்திற்கு அழைத்து செல்ல முற்பட்டனர் . விஷயம் அறிந்த பரமதத்தன் தெய்வத்திற்கு இணையாக தான் கருதும் புனுதவதி தன்னை தேடி வருதல் பாவமாக கருதி தன் மனைவியையும் குழந்தையையும் கூட்டி சென்று மூவரும் அவள் காலடியில் வீழ்ந்தனர் . எல்லோரும் திகைத்து மனைவிவை வணங்குவதன் காரணம் கேட்டனர் . பரமதத்தன் அவள் சாதாரண பெண்ணல்ல தெய்வத்திற்கு சமமானவள் எல்லோரும் வணங்க வேண்டியவள் என்று கூறுகிறான் . தன் பெண்ணிற்கு அவள் பெயர் சூடி இருப்பதையும் கூறுகிறான் .எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர் .
No comments:
Post a Comment