Friday, 1 August 2014

இத்தகைய  ஈசனின்  திருவிளையாடல்கள்  பல  நிகழ்ந்த  பக்தி  அலையின்  பொற்காலம்  இது.
9ஆம்  நூற்றாண்டில்  வாழ்ந்த  சுந்தரர்  தம் திருத்தொண்டர்  தொகை  பதிகத்தில் '' தில்லை  வாழ்  அந்தணர்தம்  அடியார்க்கு  அடியேன் . திருநீலகண்டத்து  குயவனாற்கும்  அடியேன் '' என்று  வரிசையாக  எல்லா  நாயன்மார்களையும்  .எல்லோர்க்கும்  அடியேன்  என்று  பாடுகிறார் . ஆகையால்  நாயன்மார்கள்  வரிசையில்   இவரே  கடைசி யாக  இருக்கவெண்டும்  என்றும்  குறிப்பிட்டுள்ளார்  ஐய்யங்கார் . ஆதலால்  இந்த காலம்  9 நூற்றாண்டு  வரை  இருந்திருக்க  வே ண்டும்.. இவர்கள்  எல்லோராலும்  பாடப்பெற்று  பல  அற்புதங்களை  நிகழ்த்திய  இப்பதிகங்கள்  நான்  முன்பே  கூறியபடி  12 திருமுறை களாக  தொகுக்கப்பட்டு  இன்று  வரை  எல்லா  சிவாலை யங்களிலும்  பக்தியுடன்  பாடப்படுகின்றன . சேக்கிழார்  பெருமான்  63 நாயன்மார்கள்  சரிதமும்   பாடலாக  புனைந்து .பெரிய புராணம்  இயற்றி  அதை 12வது  திருமுரையாக்கி  பெரும்  பேறு  பெற்றார் .  

No comments:

Post a Comment