ஐயடிகள் காடவர்கோன் அடியார்க்கும் அடியேன் |
தொண்டை நாட்டிலே காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த பல்லவ குலத்து அரச பரம்பரையில் பிறந்தவர் ஐயடிகள் காடவர்கோன் என்பவர் . அவருக்கு மக்கள் எல்லோரும் எம்பெருமான் சேவையில் ஈடுபட்டு பேரின்ப வாழ்வு வாழ வேண்டும் என்ற பேரவா. இவ்வாறு சைவம் தழைக்க ஆட்சி புரிந்து வரும் நாளில் அவருக்கு ஐயன் கோயில் கொண்டுருக்கும் ஆலயங்களை தரிசித்து மகிழ்ந்து வாழ்நாளை கழிக்க பேராவல் உண்டாயிற்று . ஆட்சி பொறுப்பை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு தலயாத்திரை கிளம்பினார் . முதலில் தில்லை சென்றார் . அங்கு அம்பலக்கூத்தனை தரிசித்து அவர் திருக்கூத்தை கண்டு களித்து செந்தமிழ் வெண்பாக்கள் பாடி மகிழ்ந்தார் . அதன்பின் பல தலங்களை தரிசித்து ஒவ்வொரு தலத்திலும் ஒவ்வொரு வெண்பா பாடி மகிழ்ந்தார் . இவ்வாறாக ஐயன் திருப்பணி செய்து கொண்டு பல காலம் வாழ்ந்து ஈசன் அடி சேர்ந்தார் .

No comments:
Post a Comment