அதிசூரன் ஏனாதியாரின் மீது அவர் புகழ் காரணமாக மிக வெறுப்பு கொண்டான் . அவரை எப்படியாவது பழி வாங்கும்வெறியுடன் இருந்தான் . ஒரு நாள் அவன் கத்தியுடன் ஏனாதியாரை சந்திப்பதற்கு தன் சீடர்களுடன் அவர் வீட்டிற்கு சென்றான் . ஏனாதியருக்கு இவர்களை காண இவர்கள் எதற்காக வந்திருப்பார்கள் என்று புரியாமல் ஆச்சர்யத்துடன் பார்த்தார் . உடனே அதிசூரன் இவ்வாறு இருவரும் ஒரே தொழிலில் ஈடுபட்டிருப்பது இருவருக்கும் சங்கடம் . ஆகையால் நாம் இருவரும் சண்டையிட்டு யார் வெல்கிறார்களோ அவரே இத்தொழிலில் இருக்கலாம் என்று அவரை போட்டிக்கு அழைத்தான் . இதற்குள் ஏனாதியின் சீடர்களும் அங்கு குழுமி விட்டனர் . இதை கண்ட ஏனாதியார் இத்தனை பேர்கள் சேர்ந்து விட்டதால் இங்கு சண்டை இடுவது சரியல்ல வேறு மைதானத்தில் போட்டியை வைத்துக்கொள்ளலாம் என்று கூறினார் .
No comments:
Post a Comment