குறிப்பிட்டபடி குறிப்பிட்ட இடத்தில் ஏனாதியரும் அதிசூரனும் கத்தி கேடயத்துடன் சண்டைக்கு தயாரானார்கள் அதிசூரன் தன் முகத்தை கேடயத்தால் மறைத்து கொண்டிருந்தான் . இருவரும் கத்தியை சுழற்றிக்கொண்டு சண்டை இட்டனர் அதிசூரன் முகத்தை மறைத்தபடியே சண்டை இட்டான் . ஏனாதியார் வெற்றி பெரும் நிலையில் கத்தியை ஓங்க எத்தனிக்கையில் திடீரென்று அதிசூரன் தந்திரமாக கேடயத்தை விலக்கினான் . ஏனாதியார் திடுக்கிட்டார் . அவன் முகத்தில் பட்டையாக திருநீறு பூசி இருந்தான் அவனுக்கு ஏனாதியரை நன்றாக தெரியுமாதலால் சிவனடியார்களை அவர் நிச்சயமாக பெரிதும் மதிப்பார் என்றும் அவர்களுக்கு தீங்கு ஏதும் செய்யமாட்டார் என்றும் உணர்ந்திருந்தான் . ஏனாதியார் அவன் சிவனடியாராக மாறி விட்டான் என்று தீர்மானித்து கத்தியை கீழே போட நினைத்தவர் ஆயுதமற்றவனை கொன்றான் என்ற பழி சொல் சிவனடியாராக மாறியவனுக்கு வந்துவிட கூடாதென்று கத்தியை கையில் பிடித்து கொண்டு நின்றார் . அதுவே நல்ல தருணம் என்று அதிசூரன் கத்தியால் குத்தி அவரை மாய்த்தான் . உயிர் துறக்கும் தருவாயில் ஈசன் ஏனாதியருக்கு காட்சி கொடுத்து தன்னுடன் சேர்த்துக்கொண்டார் .
No comments:
Post a Comment