அப்பரடிகள் தன் பக்தி பயணத்தை தொடர்கிறார் . அவர் ஞானசம்பந்தரை சந்திக்க பேராவல் கொண்டு அவரை சந்தித்து இருவரும் சேர்ந்து தங்கள் பக்தி யாத்திரையை தொடர்கின்றனர் . அவர்கள் இப்போது வேதாரண்யம் என்று அழைக்கப்படும் திருமறைக்காடை வந்தடைகின்றனர் . கோவிலை அடைந்து உள்ளே சென்ற அவர்கள் சன்னதிக்கு நுழை வாயிற் கதவு பூட்டப்பெற்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் . மக்களை வினவினார்கள் . வேதங்கள் சிவபிரானை வழிப்பட்டபின் பூட்டிய கதவு திறக்க வேதம் ஓதும் அந்தணர்கள் முயன்றும் முடியவில்லை என்று கூறினர் .''அருமறைகள் திருகாப்பு செய்து வைத்த அக்கதவம் திறந்திட " கூடவில்லை என்று சேக்கிழார் பெரிய புராணத்தில் கூறுகிறார் .
No comments:
Post a Comment