Sunday, 2 June 2013

ஒன்றே  குலம்  ஒருவனே  தேவன்  என்ற  கருத்தினைத்தான்
திருமந்திரம்  முதல்  பாட்டே  ஓதுகிறது .எல்லா  உயிர்களிலும்
நீக்கமற  நிறை ந்து இருப்பது  'சிவம் ' என்று  ஓதுகிறது . அன்பே
சிவம்  என்பது  திருமூலர்  வாக்கு .' சாத்திரம்  பல  பேசும்  சழக்க-
ர்காள்  கோத்திரமும்  குலமும்  கொண்டு  என்  செய்வீர்/?'
என்று  வினவுகிறார்  அப்பர் பெருமான் '". பாத்திரம்  சிவம்  என்று
பணிந்தால் மாத்திரைக்குள்  அருள்வார் "என்கிறார் .ஜாதி  இரண்டு
ஒழிய  வேறில்லை  என்கிறாள்  ஔவை  பிராட்டி . இவ்வாறு  சமூக  ஏற்ற  தாழ்வை  கண்டித்து  பக்தியுடன்  கலந்த  பாக்கள்
ஈசன் முன்  பாடப்பட்டு  பல  ஆயிரம்  மக்களால்  கேட்கப்பட்டன .இன்னும்  எத்தனையோ  சமூகநல  கருத்துகளும்
பக்தியுடன்  கலந்து  பாடப்பட்டன . இவ்வாறு  தமிழிசை  பல  பரிமா
ணங்களில்  திகழ்ந்து  இன்று வரை  நிலை  பெற்று  இருக்கிறது .
 .     "

No comments:

Post a Comment