அடுத்து நாம் காணப்போகும் கவி நீலகண்ட சிவன் ஆவார் . அவர் வாழ்ந்த காலம் 1839 முதல் 1900 வரை ஆகும் . இவர் கன்யாகுமரி யில் பத்மநாபபுரத்தை சேர்ந்தவர் .சிறு வயது முதலே பாடல் புனையும் ஆர்வமும் ஆற்றலும் பெற்றிருந்தார் .இவருக்கு சங்கீத சிக்ஷை கிடையாது . கொடக நல்லூர் சுந்தர ஸ்வாமிகள் என்பவரை சந்தித்த பின் சங்கீதத்தில் ஆர்வம் ஏற்ப்பட்டது . பாட்டு திறமையும் வெளிப்பட்டது . கிராம நீதி துறையில் 15 ஆண்டுகள் வேலை பார்த்த பின் வேலையை துறந்து விட்டு .பாட்டு பஜனை யில் முழுவதுமாக ஈடுபட்டார் .
No comments:
Post a Comment