மருள்நீக்கியார் தன் உடன்பிறந்தவளின் காலை இறுக பற்றிக்கொண்டு தன்னை மன்னித்து ஏற்றுக்கொள்ளும்படி கதறினார் . தனக்கு அவரை தவிர வேறு கதியில்லை தன்னை காப்பாற்றும்படி மன்றாடினார் . திலகவதியார் ஐயன் தான் வாக்களித்தபடி தம்பியை ஏற்றுக்கொள்ளவே இந்நோயை கொடுத்தார் . இனி தம்பியை பற்றி கவலை தேவை இல்லை அந்த அம்பலக்கூத்தன் ஏற்றுக்கொள்வான் . என்று பூரணமாக நம்பி கண்ணீர் மல்க தம்பியை தூக்கி எடுத்தாள் . மாட த் திலிருந்து கை நிறைய திருநீரை எடுத்து கொடுத்து பிற சமயங்களை உதறிவிட்டு வீரட்டானத்துறை ஈசனை சரணடை ந்தால் எல்லாம் அவர் பார்த்துக்கொள்வார் கவலை வேண்டாம் இத்திருநீறை அணிந்து கொள் .என்று சொல்லி அவரை அணைத்துக்கொண்டாள்
No comments:
Post a Comment