இவ்வாறு விசாரசர்மனின் சிவஆராதனை தொடர்ந்தது . அவன் மனமும் ஆனந்தம் அடைந்தது . வழக்கமாக பசுக்களும் இவன் பாலபிஷேகத்திற்கு தேவையான பாலை இவனுக்கு அளித்துவிட்டு சொந்தக்காரர்களுக்கும் வஞ்சனையின்றி பால் பொழிந்தன . அப்போது ஒருநாள் துரதிஷ்டவசமாக ஒருவன் விசாரசர்மன் மணல் லிங்கத்திற்கு பால் அபிஷேகம் செய்வதை பார்த்துவிட்டு சிறுவன் பாலை வைத்துக்கொண்டு விளையாடுவதாக எண்ணி அக்கிரகாரத்தில் எல்லோரிடமும் இதை சொல்லிவிட்டு அவன் தந்தை எச்சதத்தனிடமும் முறையிட்டான் . அவரும் சிறுபிள்ளை தெரியாமல் செய்திருப்பான் . கண்டிக்கிறேன் என்று சொல்லி விட்டார் .
No comments:
Post a Comment